TNPSC Thervupettagam

போலியோ இல்லாத நாடு – இந்தோனேசியா

November 29 , 2025 13 days 72 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது இந்தோனேசியாவை போலியோவின் இரண்டாம் வகை வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட்ட நாடாக அறிவித்துள்ளது.
  • போலியோ வைரஸ் என்பது பக்கவாதத்தையும் சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகின்ற, பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கின்ற மிகவும் தொற்று மிக்க வைரஸ் ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் குழந்தைகளிலோ அல்லது சுற்றுச்சூழலிலோ போலியோ வைரஸ் கண்டறியப்படவில்லை.
  • இந்தத் தொற்று 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆச்சேவில் தொடங்கி, மேலும் பல மாகாணங்களுக்குப் பரவியது, 2024 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதியன்று கடைசி பாதிப்பு பதிவானது.
  • 2023 ஆம் ஆண்டில் 63% ஆக இருந்த செயலற்ற போலியோ தடுப்பூசியின் (IPV) இரண்டாவது தவணையைப் பெறும் குழந்தைகள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 73% ஆக உயர்ந்ததுடன் தடுப்பூசி வழங்கீடு மேம்பட்டது.
  • இந்தோனேசியா DPT-HB-Hib (டிஃப்தீரியா, கக்குவான் இருமல், இரண ஜன்னி, ஹெபடைடிஸ் பி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை B) மற்றும் IPV (செயலற்றப் போலியோ தடுப்பூசி) ஆகியவற்றை இணைக்கும் ஒரே தவணையில் ஆறு நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்குகின்ற ஹெக்ஸாவலன்ட் (று இணை திறன் கொண்ட) தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்