இந்தியா முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 முதல் 23 ஆம் தேதி வரை 8-வது போஷன் பக்வாடாவை அரசு அனுசரித்து வருகிறது.
ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"Maximizing Brain Development in the First Six Years of Life" என்பது இதன் கருத்துருவாகும்.
இது ஆரம்பகால குழந்தைப் பருவ ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை, குறிப்பாக முதல் 1,000 நாட்களை முன்னிலைப்படுத்துகிறது.
தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து, ஆரம்பகாலத் தூண்டுதல், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் மற்றும் திரை நேரத்தைக் குறைத்தல் ஆகியவை முக்கிய கவனம் செலுத்தப்படும் பகுதிகளாகும்.