ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு செப்டம்பர் 2025
September 17 , 2025 2 days 24 0
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, எலோன் மஸ்க் 384 பில்லியன் டாலர் என்ற மொத்த நிகர மதிப்புடன் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
லாரி எலிசன் 88.5 பில்லியன் டாலர் மதிப்பு சொத்தினைப் பெற்றதையடுத்து 383 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் 4.68 பில்லியயன் டாலர் இழந்த போதிலும் 264 பில்லியயன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
மைக்கேல் டெல் 151 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் பத்தாவது இடத்தைப் பிடித்தார்.
ஆரக்கிள் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி (CTO) லாரி எலிசன் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கை விஞ்சி 1 நாள் மட்டும் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார்.
எலிசனின் நிகரச் சொத்து மதிப்பு 89 பில்லியன் டாலர் அதிகரித்து 383.2 பில்லியன் டாலரை எட்டியது.