மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயத்தைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - மே 23
May 27 , 2022 1304 days 489 0
இது வளர்ந்து வரும் நாடுகளில், பிரசவத்தின் போது பல பெண்களைப் பாதிக்கும் ஒரு நிலையாகும்.
2003 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் அதன் உறுப்பினர் நாடுகள் மகப்பேறின் போது பிறப்புறுப்பினுள் ஏற்படும் காயம்/சிதைவு நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு உலகளாவியப் பிரச்சாரத்தைத் தொடங்கின.
இந்தத் தினமானது 2012 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் சிதைவு நிலை என்பது (மகப்பேறியல்) ஒரு மோசமான பிரசவ காயம் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பொது சுகாதார மற்றும் மனித உரிமைகள் சார்ந்த ஒரு பிரச்சினையாகும்.