மத்திய அரசானது லக்சயா (LaQshya - Labour room Quality improvement Initiative/ லக்சயா – மகப்பேறு அறையின் தர மேம்பாட்டு முயற்சி) எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது பொது சுகாதார மையங்களில் மகப்பேறு அறை மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவற்றில் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இது மகப்பேறு அறை மற்றும் அறுவைச் சிகிச்சை அரங்குகளில் மகப்பேறு சுகாதாரத்தின் பராமரிப்புத் தொடர்புடைய கர்ப்பிணிப் பெண்கள் இறப்பு மற்றும் குழந்தைகள் இறப்பு, நோயுற்றத் தன்மை, கருவில் குழந்தைகள் இறப்பு ஆகியவற்றைக் குறைப்பதையும் மகப்பேறுப் பராமரிப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.