மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஆளில்லா விமானங்கள் வழங்கும் திட்டம்
December 4 , 2023 609 days 296 0
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் உரை நிகழ்த்திய போது ‘நமோ ட்ரோன் திதி’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
வேளாண்மை நோக்கங்களுக்காக விவசாயிகளுக்கு வாடகை சேவைகளை வழங்கச் செய்வதற்காக 2024-25 முதல் 2025-2026 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் 15,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு (SHGs) ஆளில்லா விமானங்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆளில்லா விமானங்கள் மற்றும் அதன் துணைக் கருவிகள்/ அதன் துணை உபகரண கட்டணங்களுக்கான அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரையான செலவில் 80% நிதி மத்திய அரசின் நிதி உதவி மூலம் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் ஆனது மகளிர் சுய உதவிக் குழுக்களை (SHGs) மேம்படுத்தவும், வேளாண் துறையில் ஆளில்லா விமானச் சேவைகள் மூலம் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும் முயல்கிறது.
மானிய விலையில் மருந்துகளை விற்கும் ஜன் ஔஷதி கேந்திராக்களின் எண்ணிக்கையை 10,000லிருந்து 25,000 ஆக உயர்த்தும் முன்னெடுப்பினையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர், எய்ம்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 10,000வது ஜன் ஔஷதி கேந்திராவைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.