பிரத்தியேக மகளிர் தொழிற்பூங்காவை நிறுவுவதற்காக ஆந்திரப் பிரதேசம் FICCI-FLO உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தத் தொழிற்பூங்கா, பெண்களால் நடத்தப்படும் தொழில்கள், புத்தொழில்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக (MSME) 30 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப் படும்.
FICCI-FLO அமைப்பானது வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் வணிக ஆதரவை வழங்கும்.
இந்த முயற்சி, முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவின் "ஒரு குடும்பம், ஒரு தொழில் முனைவோர்" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது.
இது ஆந்திரப் பிரதேசத்தில் 175 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பூங்காக்களை உருவாக்கும் மாநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.