TNPSC Thervupettagam

மகாபரிநிர்வான் திவாஸ் 2025

December 9 , 2025 3 days 72 0
  • டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 06 ஆம் தேதியன்று இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • மகாபரிநிர்வான் என்ற சொல்லிற்கு புத்தத் தத்துவத்தில் "வீடுபேறு/முக்தி" என்று பொருள் ஆகும்.
  • அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியன்று புத்த மதத்தைத் தழுவினார்.
  • அவர் வட்டமேசை மாநாடுகளில் (1930–1932) முக்கியப் பங்கு வகித்தார் என்பதோடு மேலும் பூனா ஒப்பந்தத்தில் (1932) அவர் கையெழுத்திட்டார்.
  • அவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பணியாற்றினார் மற்றும் இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார்.
  • 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியன்று புத்த மதத்திற்கு மாறிய அவர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் தேதியன்று காலமானார்.
  • அவருக்கு 1990 ஆம் ஆண்டில் (மறைவிற்குப் பிந்தைய) பாரத ரத்னா (இந்தியாவின் மிக உயரிய குடிமை விருது) வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்