TNPSC Thervupettagam

மகாராஷ்டிராவில் கழுகு பாதுகாப்பு திட்டம்

February 14 , 2026 9 days 79 0
  • கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் மெல்காட் மற்றும் தடோபா புலிகள் காப்பகங்களில் புலம்பெயரும் இமயமலை பிணந்திண்ணி கழுகுகள் சமீபத்தில் தென்பட்டன.
  • மெல்காட் புலிகள் காப்பகத்தில் ஒரு இமயமலை பிணந்திண்ணி கழுகு பதிவு செய்யப் பட்டது, மற்றும் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் ஒரு யூரேசிய பிணந்திண்ணி கழுகு பதிவு செய்யப் பட்டது.
  • மகாராஷ்டிரா வனத்துறையும் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கமும் கழுகு பாதுகாப்பு இனப்பெருக்க மையத் திட்டத்தைத் தொடங்கின.
  • ஜனவரி 2026 இல், காப்பினப்பெருக்கம் செய்யப்பட்ட நீண்ட-அலகுகள் கொண்ட கழுகுகள் தகவல்தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்பு மற்றும் செயற்கைக் கோள் தகவல் பரிமாற்ற அமைப்புகள் பொருத்தப்பட்ட பின்னர் காட்டுக்குள் விடப் பட்டன.
  • இமயமலை பிணந்திண்ணி கழுகு IUCN செந்நிறப் பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • யூரேசிய பிணந்திண்ணி கழுகு IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த உயிரினமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்