நிர்வாகம் மற்றும் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவை (AI) மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிர அரசு 'AI கொள்கை 2026'-ஐ அறிவித்துள்ளது.
2031 ஆம் ஆண்டுக்குள் ₹10,000 கோடி முதலீட்டை ஈர்ப்பதையும், 1.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா AI திட்டத்தினை அமைப்பதற்கும், 2 லட்சம் இளைஞர்களுக்கு AI திறன்களில் பயிற்சி அளிப்பதற்கும் இது முன்மொழிகிறது.
AI நகரங்கள் உருவாக்கப்படும் என்பதுடன் மேலும் மாநில AI தரவு பரிமாற்றத் தளமும் உருவாக்கப் படும்.
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க ₹500 கோடி மதிப்பிலான AI புத்தொழில் நிறுவன துணிகர மூலதன நிதி மற்றும் 12 AI காப்பகங்கள் அமைக்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) AI தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு 20% மானியம் வழங்கப்படும்.