மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பினை மேற்கொள்வதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
சிறையில் உள்ள இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டச் சட்டமன்ற உறுப்பினர்களும் அமலாக்க இயக்குநரகம் / மத்தியப் புலனாய்வு வாரியம் பதிவு செய்த வழக்குகளின் காரணமாக நீதிமன்றக் காவலில் இருப்பதால், அவர்களை வாக்களிக்க அழைத்துச் செல்வதற்கு அந்த இரு நிறுவனங்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்துவதற்காக ஜூன் 30 ஆம் தேதியன்று, மகாராஷ்டிரா மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு சிறப்புக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.