மக்களுக்கான பல்லுயிர்த் தன்மையின் பதிவேடு - தமிழ்நாடு
October 21 , 2018 2395 days 1042 0
தமிழ்நாடு அரசானது மக்களுடைய பல்லுயிர்த் தன்மைக்கான பதிவேட்டினை (People’s Biodiversity Registers - PBR) இணைய தளத்தில் நேரடியாக வெளியிடுவதற்குத் திட்டமிடுகின்றது.
இது தனது மக்களுடைய பாரம்பரிய அறிவையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகும்.
மதிப்புமிக்க இயற்கை வளங்களின் இருப்பை நேரடியாக இணைய தளத்தில் வெளியிடுவது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
2002ம் ஆண்டின் தேசிய பல்லுயிர் பெருக்கச் சட்டத்தின்படி தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்புப் பட்டியலை வெளியிடுவது கட்டாயமாகும்.
தாவரங்கள், வன உயிர்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைத் தவிர இப்பதிவேடு விவசாய நிலம், தீவனப் பயிர்கள், நில அமைப்பு, நீரமைப்பு மற்றும் மக்கள் தொகை அமைப்பு ஆகிய தகவல்களையும் கொண்டிருக்கும்.