TNPSC Thervupettagam

மக்கள்தொகையியல் மாற்றம் குறித்த உயர்மட்டக் குழு

May 30 , 2026 13 hrs 0 min 18 0
  • இந்தியாவில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அசாதாரண இடம்பெயர்வு முறைகளால் ஏற்படும் மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
  • இக்குழுவிற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. பிரகாஷ் பிரபாகர் நவ்லேகர் தலைமை தாங்குகிறார். 
  • இந்தக் குழுவானது மக்கள்தொகை மாற்றங்கள், எல்லைப் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் பழங்குடியினர் மற்றும் உள்ளூர் சமூகங்கள் மீதான அவற்றின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும். 
  • குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025-இன் கீழ், முறையான ஆவணங்கள் இல்லாத குடியேற்றவாசிகளை அடையாளம் காணுதல், காவலில் வைத்தல் மற்றும் நாடுகடத்துதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கும். 
  • தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வலுவான எல்லை மேலாண்மை, அடையாளச் சரிபார்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளையும் இக்குழு பரிந்துரைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்