2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, சட்டவிரோதமாக ஊடுருவும் மக்களால் ஏற்படும் ("குஸ்பைத்தியர்கள்") மக்கள்தொகை அச்சுறுத்தல் திட்டத்தினை இந்தியா அறிவித்தது.
இந்த நெருக்கடியை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமாளிக்க ஓர் உயர் அதிகாரம் கொண்ட மக்கள்தொகைத் திட்டம் தொடங்கப்படும்.
இந்த ஊடுருவல்கள் வேலைவாய்ப்புகளைப் பாதிப்பதாகவும், பெண்களைக் குறி வைப்பதாகவும், பழங்குடியின நிலங்களைக் கைப்பற்றுவதாகவும் கூறப்படுகிறது.
எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை இட மாற்றங்கள் தேசியப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பதற்றம் போன்ற கவலைகளை எழுப்புகின்றன.
ஊடுருவலில் இருந்து தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றினைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.