மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் இந்தியத் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை புது தில்லியில் கட்டுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
இதற்கு “ஜங்கனானா பவன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
தேசிய மக்கள் தொகைப் பதிவு (National Population Register - NPR) மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றைத் தயாரிக்க 12,000 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கின்றது.
இதுபற்றி
NPR ஆனது எந்தவொரு சாதாரண குடியிருப்பாளரின் உயிர்த்தரவு மற்றும் மக்கள் தொகை விவரங்களை இணைக்கின்றது. இது குடியிருப்பாளர்களின் விரிவான தரவுத்தளமாக அவற்றை மாற்றுகின்றது.
ஒரு சாதாரண குடியிருப்பாளர் என்பவர்
கடந்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு உள்ளூர் பகுதியில் வசித்த நபராக வரையறுக்கப் படுகின்றார். (அல்லது)
அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு அந்தப் பகுதியில் வசிக்க விரும்பும் ஒருவராக வரையறுக்கப் படுகின்றார்.
NPR நடவடிக்கையானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து வேறுபட்டது. இது தேசிய குடிமக்களின் பதிவேட்டில் (NRC - National Register of Citizens) இணைக்கப்படவில்லை.