TNPSC Thervupettagam

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பு

April 2 , 2026 13 hrs 0 min 67 0
  • இந்தியா தனது முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடத்த உள்ளது.
  • இது தொடக்கத்திலிருந்து 16-வது கணக்கெடுப்பாகவும், 1947 சுதந்திரத்திற்குப் பிறகு 8-வது கணக்கெடுப்பாகவும் அமையும்.
  • முதன்முறையாக அலைபேசி செயலிகள் மற்றும் சுய-கணக்கெடுப்பு முறை பயன்படுத்தப் படும்; இதன் மூலம் குடிமக்கள் 16 மொழிகளில் இணையவழியில் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
  • இந்தக் கணக்கெடுப்பு 'மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948' மற்றும் 'மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990'-இன் கீழ் நடத்தப்படும்.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீட்டுப் பட்டியல் தயாரிப்பு மற்றும் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இவை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
  • இதற்கான அதிகாரப்பூர்வ குறிப்புத் தேதி 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆகும்; ஆனால் பருவநிலை காரணமாக சில மலைப்பகுதிகளில் குறிப்புத் தேதியானது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1, ஆக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்