மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பு
April 2 , 2026 61 days 246 0
இந்தியா தனது முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடத்த உள்ளது.
இது தொடக்கத்திலிருந்து 16-வது கணக்கெடுப்பாகவும், 1947 சுதந்திரத்திற்குப் பிறகு 8-வது கணக்கெடுப்பாகவும் அமையும்.
முதன்முறையாக அலைபேசி செயலிகள் மற்றும் சுய-கணக்கெடுப்பு முறை பயன்படுத்தப் படும்; இதன் மூலம் குடிமக்கள் 16 மொழிகளில் இணையவழியில் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இந்தக் கணக்கெடுப்பு 'மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948' மற்றும் 'மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990'-இன் கீழ் நடத்தப்படும்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீட்டுப் பட்டியல் தயாரிப்பு மற்றும் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இவை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
இதற்கான அதிகாரப்பூர்வ குறிப்புத் தேதி 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆகும்; ஆனால் பருவநிலை காரணமாக சில மலைப்பகுதிகளில் குறிப்புத் தேதியானது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1, ஆக இருக்கும்.