மக்காச்சோளம் சாகுபடிக்கான சிறப்பு திட்டம் – தமிழ்நாடு
June 26 , 2024 394 days 500 0
தமிழ்நாடு மாநில அரசானது, 18 மாவட்டங்களில் மக்காச்சோளச் சாகுபடியின் பரப்பினை அதிகரிப்பதற்காக 30 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
50,000 விவசாயிகளுக்கு உயர்தர மக்காச்சோள விதைகள், இயற்கை மற்றும் திரவ உரங்கள் மற்றும் யூரியா ஆகியவை அடங்கிய தொகுதி வழங்கப்படும்.
இது மக்காச்சோளச் சாகுபடி நிலப்பரப்பினை 50,000 ஹெக்டேர் பரப்பளவு வரை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில், 39.09 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியுடன், சிறு தானியங்களின் சாகுபடி பரப்பளவை 9.95 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இலக்கானது 31.31 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.
2024-25 ஆம் ஆண்டில் மொத்த உணவு தானிய உற்பத்தி இலக்கு 129.63 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது.
கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியானது, 118.02 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.