வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR) நிர்வாகமானது அதன் இரயில்களில் மக்கும் வகையிலான உயிரி நெகிழிப் பைகளைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் இரயில்வே மண்டலமாக மாறியது.
இந்த முன்னெடுப்பானது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மக்கும் வகையிலான பைகளில் படுக்கைத் துணி விநியோகத்துடன் தொடங்கியது.
ISO17088 தரத்திற்கு இணக்கமான உயிரி நெகிழி ஆனது கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினால் (IIT-G) உருவாக்கப்பட்டது.
இந்தச் சோதனைத் திட்டம் ஆனது 25 இரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, அசாம், பீகார், வங்காளம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் 40,000 பைகள் விநியோகிக்கப்பட்டன.