TNPSC Thervupettagam

மக்கும் வகையிலான பொதிகட்டும் பொருள்

August 20 , 2025 17 hrs 0 min 6 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வேளாண் கழிவுகள் மற்றும் பூஞ்சைகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதி கட்டும் பொருளை உருவாக்கி வருகின்றனர்.
  • அவர்கள் வேளாண்மை மற்றும் காகிதக் கழிவுகளைப் பயன்படுத்தி மக்கும் வகையிலான பொதி கட்டும் பொருளை உருவாக்கினர்.
  • கனோடெர்மா லூசிடம் மற்றும் ப்ளூரோடஸ் ஆஸ்ட்ரேட்டஸ் போன்ற பூஞ்சைத் திரிபுகள் ஆனது கழிவுசார் மூலக்கூறுகளில் வளர்க்கப்பட்டன.
  • இது அட்டைப் பெட்டியில் வளர்க்கப்படும் கனோடெர்மா EPS (விரிவாக்கப்பட்ட பாலிஸ்டைரீன்) கூறினை விட அதிக அழுத்தம் கொண்ட வலிமையைக் காட்டியது.
  • இந்தியா ஆண்டுதோறும் 350 மில்லியன் டன்களுக்கு மேலான வேளாண் கழிவுகளை உற்பத்தி செய்கிறது, அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் உள்ளன.
  • இந்தப் பொதி கட்டும் பொருள் ஆனது வழக்கமான தாள்களுக்குப் பதிலாக நெகிழி இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக அமையும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்