TNPSC Thervupettagam

மங்கோலியாவில் புத்தர் சிலை திறப்பு

September 21 , 2019 2064 days 692 0
  • இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மங்கோலிய அதிபர் கல்ட்மகின் பட்டுல்கா ஆகியோர் உலான் பாட்டரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தன் டெக்சென்லிங் மடாலயத்தில் புத்தர் சிலையைக் காணொளி மூலம் திறந்து வைத்தனர்.
  • இந்தச் சிலையானது புத்தர், அவரது இரண்டு சீடர்களுடன் அமர்ந்திருக்கும் நிலையில் சமாதானம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றுடன் கருணைச் செய்தியை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கின்றது.

  • இந்த மாத தொடக்கத்தில் உலான் பாட்டரில் நடைபெற்ற "சாம்வாட்" என்ற  கலந்துரையாடலின் மூன்றாம் பதிப்பின் போது இது கந்தன் மடாலயத்தில் நிறுவப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது.
  • 3வது சாம்வாட் என்பது உலக புத்த அறிஞர்கள் மற்றும் துறவிகளால் சமகால புத்தத்தைப் பற்றிய விவாதமாகும்.
  • மங்கோலிய அதிபர் 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்