TNPSC Thervupettagam

மசாய் பீடபூமி பாதுகாப்பு இருப்பு

November 2 , 2026 7 days 109 0
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குளிர்காலம் தொடங்கியதையடுத்து வெளிர் பட்டைப் பருந்து மற்றும் ஐரோப்பிய நீலச் சிட்டு உள்ளிட்ட வலசைப்போகும் பறவைகள் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மசாய் பீடபூமிக்கு வந்தன.
  • மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் போன்ற பகுதிகளில் இருந்து வலசைப்போகும் மான்டேகு பூனைப்பருந்து மற்றும் சிறிய கெஸ்ட்ரல் உள்ளிட்ட பிற பறவைகளும் காணப்பட்டன.
  • வெளிர் பட்டைப் பருந்து மற்றும் மாண்டேகு பூனைப்பருந்து ஆகியவை இரை தேடும் பறவைகள், அதே சமயம் ஐரோப்பிய நீலச் சிட்டு முக்கியமாக பூச்சிகளை உணவாகக் கொள்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று கர்வீர் தாலுகாவில் உள்ள மாஹே மலைப்பகுதிகளில் ஐரோப்பிய நீலச் சிட்டு முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டது.
  • வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் பிரிவு 36A இன் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று மசாய் பீடபூமி ஒரு பாதுகாப்பு இருப்பாக அறிவிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்