மசாலாப் பத்திரங்கள் - இரட்டை முறையில் பட்டியலிடுதல்
September 23 , 2018 2510 days 858 0
இந்திய தேசியப் பங்குச் சந்தையும் லண்டன் பங்குச் சந்தையும் மசாலாப் பத்திரங்களுக்கும், இந்திய நிறுவனங்கள் வெளியிடும் வெளிநாட்டு நாணயப் பத்திரங்களுக்கும் இரட்டை முறையில் பட்டியலிடும் வழிமுறையை உருவாக்குவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் அந்நிய நாணயப் பத்திரங்கள் லண்டனிலும் பட்டியலிடப்படும் வகையில் கூடுதல் கூட்டுப் பட்டியலிடும் முறைக்கான ஒரு வலுவான முன்னோட்டமாக இருக்கக் கூடும்.
இந்த கூட்டு ஒப்பந்தம், 2019ம் ஆண்டில் இந்தியாவில் LSEG (London Stock Exchange Group) நிறுவனத்தின் தனியார் நிறுவனங்களின் உயர் வளர்ச்சிக்கான வியாபார ஆதரவு, முதலீடு திரட்டும் திட்டம் ஆகியவற்றுக்கான திட்டமான “Elite” என்ற திட்டத்தை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை ஆராயும்.
இந்த ஒப்பந்தம் உள்நாட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை அணுகுவதற்கு வழிவகை செய்யும்.