TNPSC Thervupettagam

மசாலாப் பொருட்கள் வர்த்தகப் பாதைகளின் வலையமைப்பு

January 11 , 2026 12 days 79 0
  • கேரளா மாநிலம் சர்வதேச மசாலாப் பொருட்கள் வர்த்தகப் பாதைகள் பாரம்பரிய வலையமைப்பை அறிமுகப்படுத்தியது.
  • இந்த முன்னெடுப்பானது கேரளாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் வரலாற்று மசாலாப் பொருட்கள் வர்த்தகப் பாதைகளை புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • கொச்சியில் நடைபெற்ற மூன்று நாட்கள் அளவிலான சர்வதேச மசாலாப் பொருட்கள் வர்த்தகப் பாதைகள் மாநாட்டின் போது இது வெளியிடப்பட்டது.
  • முசிரிஸ் பாரம்பரியத் திட்டம் கேரளா முழுவதும் "மசாலாப் பொருட்களின் வர்த்தகப் பயணங்கள்" என்று அழைக்கப்படும் 33 பாரம்பரியப் பாதைகளை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இந்த வலையமைப்பு ஆராய்ச்சி, பாரம்பரியப் பாதுகாப்பு, அருங்காட்சியக மேம்பாடு மற்றும் காப்பக ஆவணங்களை ஊக்குவிக்கிறது.
  • கேரளாவிலிருந்து வரும் மசாலாப் பொருட்கள் ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் வர்த்தகம், வரிகள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களில் வரலாற்று ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்