அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒரு ஜோடி மஞ்சள் மூக்கு நாரைகள் தென்பட்டன.
இதற்கு முன்னதாக 2004, 2005 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வலசை போகும் பறவைகள் கணக்கெடுப்பின் போது மட்டுமே பதிவு செய்யப்பட்ட இவை தற்போது தென்பட்டுள்ளது ஓர் அரிய நிகழ்வாகும்.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமான காசிரங்கா அதன் வளமான ஈர நிலங்கள் மற்றும் பல்வேறு வலசை போகும் நீர்ப்பறவைகளுக்குப் பெயர் பெற்றது.