விசாகப்பட்டினத்தில் உள்ள அறிவியலாளர்கள் வடகிழக்கில் இருந்து தென்மேற்கு நோக்கி நகரும் மடையான்கள் மற்றும் கால்நடை உண்ணிக் கொக்குகளின் வருடாந்திர இரவு நேர வலசைகளை பதிவு செய்துள்ளனர்.
இதே போன்ற நிகழ்வு மற்றும் தெற்கு நோக்கிய வலசை முதன்முதலில் 1980 ஆம் ஆண்டுகளில் சென்னையிலும் பின்னர் புதுச்சேரியிலும் இயற்கை ஆர்வலர் V. சாந்த ராமால் பதிவு செய்யப் பட்டன.
இது இந்திய மடையான் அல்லது நெல் வயல் நெட்டைக் காலி பறவை (ஆர்டியோலா கிரேயி) என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஆர்டீடே (மடையான்கள், உண்ணிக் கொக்குகள் மற்றும் குருகுகள்) என்ற வகை குடும்பத்தைச் சேர்ந்தது.
இது ஈரநிலங்கள், குளங்கள், நெல் வயல்கள் மற்றும் மனிதக் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வாழ்கிறது.
இதன் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியல் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும் மற்றும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் IV ஆம் அட்டவணையிலும் பட்டிலிடப்பட்டுள்ளது.