மணல் மற்றும் தூசிப் புயல்களை எதிர்ப்பதற்கான சர்வதேச தினம் – ஜூலை 12
July 13 , 2023 769 days 282 0
ஐக்கிய நாடுகள் சபையானது இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜூலை 12 ஆம் தேதியினை மணல் மற்றும் தூசிப் புயல்களை எதிர்த்துப் போராடுவதற்கான முதல் சர்வதேச தினமாக அறிவித்தது.
இந்தப் புயல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை எதிர்ப்பதற்கான சர்வதேச அளவிலான முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றானது, வெற்று அல்லது வறண்ட மண் உள்ள பகுதியை அடையும் போது, அதிக அளவு மணல் மற்றும் தூசியை வளிமண்டலத்தில் உயர்த்தச் செய்வதால் இந்தப் புயல்கள் ஏற்படுகின்றன.
இந்தக் கனிமத் தூசிகளின் முக்கிய மூலங்கள் வட ஆப்பிரிக்கா, அரேபியத் தீபகற்பம், மத்திய ஆசியா மற்றும் சீனாவில் உள்ள வறண்ட பகுதிகள் ஆகும்.
காடழிப்பு, அதிகப்படியான மேய்ச்சல் மற்றும் அதிகப்படியான அளவில் தண்ணீரைப் பயன்படுத்துதல் போன்ற மனித நடவடிக்கைகள் பல பாலைவனங்கள் பரவுவதற்கு காரணமாகின்றன மற்றும் மணல் மற்றும் தூசிப் புயல்கள் ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அதிகரிக்கின்றன.
வட சீனாவில் மட்டும் மூன்றே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் அளவில் பொருளாதார இழப்பை இவை ஏற்படுத்தியுள்ளன.