மணிப்பூரில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனைத்து மகளிர் குழு நியமனம்
August 14 , 2023 746 days 376 0
இந்திய தலைமை நீதிபதி, D.Y. சந்திரசூட் அவர்கள், மணிப்பூரில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக உயர் நீதிமன்றத்தின் மூன்று முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட அனைத்து மகளிர் குழுவை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான இந்தக் குழுவில் உயர் நீதிமன்றத்தின் மூன்று முன்னாள் நீதிபதிகள் இடம் பெறுவர்.
பரந்தக் கொள்கை அடிப்படையிலான இந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான நீதிபதி ஷாலினி பன்சால்கர் ஜோஷி மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் ஆவர்.
ஆறு வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குநர்கள் இந்த வழக்குகளுக்காக என்று உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை மேற்பார்வையிடுவதற்காக தலா ஆறு துணைத் தலைமைக் காவல் ஆய்வாளர் நிலை அதிகாரிகளை நியமிப்பர்.