மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம் 2025 – ஆகஸ்ட் 22
August 25 , 2025 95 days 82 0
சகிப்புத்தன்மை, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் மதப் பாகுபாட்டில் வேரூன்றிய வன்முறைக்கான பொறுப்புக் கூறலை உறுதி செய்வதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையினால் அனுசரிக்கப்பட்டது.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் (பிரிவு 18) குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ள படி மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான உலகளாவிய உரிமையை இந்த அனுசரிப்பு எடுத்துக்காட்டுகிறது.