மதம் (அ) நம்பிக்கை சார்ந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம் – ஆகஸ்ட் 22
August 24 , 2021 1586 days 452 0
சமயம் (அ) நம்பிக்கை சார்ந்த சுதந்திரம் குறித்த மனித உரிமைகளை ஊக்குவிக்கச் செய்வதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் முயற்சிகளின் ஓர் அங்கமாக சமய வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இது முதன்முதலாக 2019 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான தீர்மானமானது போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஐசெக் சாபுடோவிச் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டது.