மதராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி
November 12 , 2021 1347 days 671 0
மதராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவிட் நெறிமுறைகளை மீறியதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் கொலைக் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியது இவரது அமர்வு ஆகும்.
நீதிபதி பானர்ஜி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 அன்று மதராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.
செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்றக் கூட்டத்தில் நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரைத்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை மதராஸ் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் அது பரிந்துரை செய்துள்ளது.