TNPSC Thervupettagam

மதராஸ் பல்கலைக்கழக திருத்த மசோதா

January 2 , 2026 5 days 102 0
  • தமிழ்நாடு மதராஸ் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆனது குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்றி திருப்பி அனுப்பப்பட்டது.
  • இந்த மசோதா 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
  • மதராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை (VC) நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு மாநில அரசுக்கு வழங்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டது.
  • அது இந்த அதிகாரத்தை பதவி வழி வேந்தரான ஆளுநரிடமிருந்து அரசாங்கத்திற்கு மாற்றுவதன் மூலம் மதராஸ் பல்கலைக் கழக சட்டத்தைத் திருத்த முன்மொழிந்தது.
  • 1923 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் பிரிவு 11ல், 'வேந்தர்' என்ற வார்த்தையை 'அரசு' என்ற வார்த்தையால் மாற்ற இந்த மசோதா முயன்றது.
  • UGC (பல்கலைக்கழக மானியக் குழு) விதிமுறைகளுடன் முரண்படுவது குறித்த சிக்கல்கள் காரணமாக இந்த மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப் பட்டது.
  • இந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, தமிழ்நாடு சட்டமன்றம் அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்