மத்தியப் பல்கலைக் கழகங்கள் (திருத்த) மசோதா, 2019 ஆனது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.
இது பல்வேறு மாநிலங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்காகப் பல்கலைக் கழகங்களை ஏற்படுத்த வழிவகை செய்யும் மத்தியப் பல்கலைக் கழகங்கள் சட்டம், 2009ஐ திருத்த முனைகின்றது.
இந்த மசோதா ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு மத்தியப் பல்கலைக் கழகங்களின் உருவாக்கத்திற்கு வழிவகை செய்கின்றது.
ஆந்திரப் பிரதேச மத்தியப் பல்கலைக் கழகம்
ஆந்திரப் பிரதேச மத்தியப் பழங்குடியினப் பல்கலைக் கழகம்
இதன் மூலம், கோவாவைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மத்தியப் பல்கலைக் கழகங்களைக் கொண்டு இருக்கின்றன.