மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் நல நடவடிக்கைகள்
August 12 , 2019 2359 days 937 0
மத்தியப் பிரதேச மாநில அரசானது அம்மாநிலத்தின் ஒவ்வொரு பழங்குடியினருக்கும் 10,000 ரூபாய் மிகைப்பற்றுடன் கூடிய பற்று அட்டையை வழங்கவுள்ளது.
மேலும் உள்ளூர் கடன் வழங்குநர்களிடமிருந்துப் பழங்குடியினர் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இனிமேல், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பழங்குடியினர் குடும்பத்தில் ஏற்படும் ஒவ்வொரு பிறப்பிற்கும் 50 கிலோ உணவு தானியமும் இறப்பு ஏற்பட்டால் 100 கிலோ உணவு தானியமும் அவர்களுக்கு வழங்கப் படும்.
பழங்குடியின மன்னர்களான சங்கர் ஷா மற்றும் ரகுநாத் ஷா ஆகியோரின் நினைவாக ஒரு அருங்காட்சியகமானது ஜபல்பூரில் கட்டப்படவுள்ளது.