மத்தியப் பொதுப் பணியாளர் தேர்வாணையமானது ஓர் இலவச உதவி எண்ணினை வெளியிட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த அரசு வேலைக்காகப் பயின்று வரும் ஆர்வலர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவங்களை நிரப்ப உதவுவது அல்லது மத்திய பொதுப் பணித் தேர்வாணையத்தின் தேர்வுகள் (அ) ஆட்சேர்ப்பு தொடர்பான அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் நோக்கத்துடன் இந்த இலவச உதவி எண்ணானது வெளியிடப் பட்டது.