மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம்
April 24 , 2020
1935 days
718
- மருத்துவர்கள் மற்றும் சுகாதார நலப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஓர் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
- இந்த அவசரச் சட்டத்தின் படி, சுகாதார நலப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப் படும்.
- இந்த அவசரச் சட்டமானது தொற்று நோய்கள் சட்டம், 1897 என்ற சட்டத்தைத் திருத்த இருக்கின்றது.
- மேலும் இது தொற்று நோய்ச் சட்டத்தைப் பொதுச் சட்டமாக மாற்றியமைத்து உள்ளது.
- இந்த நடவடிக்கையானது மாநில அரசுகளும் அச்சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.
Post Views:
718