மத்திய ஆசிய நாடுகளுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் சந்திப்பு
December 10 , 2022 990 days 441 0
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனது சகப் பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்புச் சந்திப்பினை மேற்கொண்டார்.
கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஓர் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்திற்காக டெல்லியில் கூடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவிற்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையேயான அரசுமுறை உறவுகள் நிறுவப் பட்டதன் 30வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
"இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அண்டை நாட்டுப் பகுதி" மற்றும் "அமைதியான, பாதுகாப்பான, செழிப்பான" மத்திய ஆசியா நமது நாட்டின் பொது நலன் என்ற கருத்தில் இருப்பதால், மத்திய ஆசியாவிற்கு இந்தியா மிக உயர்ந்த முன்னுரிமையை வழங்கியது.