TNPSC Thervupettagam

மத்திய ஆயுத காவல் படைகள் சட்டம் 2026

October 13 , 2026 11 days 118 0
  • மத்திய ஆயுத காவல் படைகள் (பொது நிர்வாகம்) சட்டம், 2026-இன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இதனை 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று நடைமுறைக்கு கொண்டு வந்தது.
  • இந்தச் சட்டமானது மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) உள்ள மூத்த பதவிகளுக்கு இந்திய காவல் பணி (IPS) அதிகாரிகளின் பணி நியமனம் மற்றும் பணியாளர் மேலாண்மை தொடர்பானதாகும்.
  • 2025 ஆம் ஆண்டு மே 23 அன்று, உச்ச நீதிமன்றம் CAPF குரூப் A அதிகாரிகளை அமைப்பு ரீதியான சேவைகளாக அங்கீகரித்ததுடன், இரண்டு ஆண்டுகளுக்குள் மூத்த பதவிகளில் IPS அதிகாரிகளின் பணியமர்த்தலை படிப்படியாகக் குறைக்க உத்தரவிட்டது.
  • 2025 ஆம் ஆண்டின் தீர்ப்பு ஆறு மாதங்களுக்குள் பணியாளர் கட்டமைப்பு மற்றும் சேவை விதிகளை மறுஆய்வு செய்யவும் உத்தரவிட்டது.
  • இந்தச் சட்டத்தை சவாலுக்கு உள்ளாக்கும் மனுக்கள் மற்றும் அது தொடர்பான அவமதிப்பு வழக்குகளை 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்