மத்திய இரயில்வே கிடங்கு நிறுவனம் – மத்திய கிடங்கு நிறுவனம் இணைப்பு
June 27 , 2021 1523 days 504 0
மத்திய இரயில்வே கிடங்கு நிறுவனத்தினையும் (Central Railway Warehouse Company – CRWC) அதன் நிர்வாக அமைப்பான மத்தியக் கிடங்கு நிறுவனத்தினையும் (Central Warehousing Corporation) இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை அதன் ஒப்புதலை வழங்கி உள்ளது.
செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நிதிச் சேமிப்பினை அதிகரித்தல் போன்றநோக்கங்களுடன் இந்த நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால் இரயில்வே கிடங்கு வளாகங்களின் மேலாண்மைச் செலவினங்கள் 5 கோடி ரூபாய் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
குறிப்பு
CRWC ஆனது மினிரத்னா அந்தஸ்தின் இரண்டாம் பிரிவினைச் சேர்ந்த ஒரு பொதுத் துறை நிறுவனமாகும்.
இது 1956 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டில் இணைக்கப் பட்டது.