மத்திய கண்காணிப்புக் குழுவின் நாணயத்தன்மை குறியீடு
October 27 , 2017 2832 days 1005 0
மத்திய கண்காணிப்புக் குழு (Central Vigilance Commission) 25 நிறுவனங்களுக்கான நாணயத்தன்மை குறியீட்டினை (Integrity Index) உருவாக்கவிருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் அதன் துறைகளுக்கு, மத்திய கண்காணிப்புக் குழு, நாணயத்தன்மை குறியீட்டினை உருவாக்க உள்ளது.
கண்காணிப்பிற்கான கூறுகளின் அடிப்படையில், மத்திய கண்காணிப்புக் குழுவானது பொது நிறுவனங்களின் மதிப்பெண்களை கணக்கிடும். இந்தக் கூறுகள், நீண்டகால திறன், லாபம், நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.
இது உள்ளார்ந்த மற்றும் புறவெளி சூழல் அமைப்பினை உருவாக்கி, பொதுத்துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்.
துவக்கத்தில் 25 நிறுவனங்கள், இக்குறியீட்டின் உருவாக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்தியகண்காணிப்புக் குழு (Central Vigilance Commission)
மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC) என்பது ஓர் தன்னிச்சையான சட்டப்பூர்வ அமைப்பாகும். இது அரசாங்கத்தின் ஊழல்களை களைவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.