மத்திய சேமக் காவல் படையின் 57வது வீர தினம் - ஏப்ரல் 09
April 11 , 2022 1215 days 461 0
மத்திய சேமக் காவல் படையின் வீர தினம் ஆனது (சௌர்ய திவாஸ்) அப்படைப் பிரிவின் துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டானது மத்திய சேமக் காவல் படையின் 57வது வீர தினத்தைக் குறிக்கச் செய்கிறது.
1965 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள சர்தார் காவல் முகப்பில், பல மடங்கு பெரியளவில், நாட்டினுள் படையெடுத்த பாகிஸ்தான் ராணுவத்தைத் தோற்கடித்து, மத்திய சேமக் காவல் படையின் சிறிய படைப் பிரிவு வரலாறு ஒன்றைப் படைத்தது.