மத்திய சேமக் காவல் படையின் 84வது எழுச்சி தினம் - ஜூலை 27
July 30 , 2022 1118 days 422 0
தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநிறுத்துவதில் இந்தப் படைகள் ஆற்றும் மகத்தான மற்றும் இணையற்றப் பங்களிப்புகளை இந்தத் தினம் கொண்டாடுகிறது.
மத்திய சேமக் காவல் படையானது இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படையாகும்.
இது உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது.
இது 1939 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று ‘அரசக் காவல் பிரதிநிதிகள் படை’ என்று உருவாக்கப் பட்டது.
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று ‘மத்திய சேமக் காவல் படைச் சட்டம்’ இயற்றப் பட்டதன் மூலம் இது மத்திய சேமக் காவல் படையாக மாறியது.