TNPSC Thervupettagam

மத்திய சேமக் காவல் படை தினம் 2026 - ஜூலை 27

July 28 , 2026 2 days 32 0
  • இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதில் மத்திய சேமக் காவல் படையின் (CRPF) சேவை, தியாகம் மற்றும் பங்களிப்புகளை கௌரவிப்பதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1939 ஆம் ஆண்டில் அரசின் பிரதிநிதிகளின் காவல்துறை என நிறுவப்பட்டது, பின்னர் 1949 ஆம் ஆண்டில் மத்திய சேமக் காவல் படை (CRPF) என மறுபெயரிடப் பட்டது.
  • இது உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படையாகும் (CAPF).
  • கிளர்ச்சி எதிர்ப்பு, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கலவரக் கட்டுப்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் CRPF முக்கியப் பங்காற்றுகிறது.
  • 2,255-க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் சேவையில் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர், அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா மற்றும் சௌர்யா சக்ரா போன்ற வீரதீர விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்