மத்திய நிதிநிலை அறிக்கை 2022-2023 - சிறப்பம்சங்கள்
February 3 , 2022 1288 days 639 0
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 அன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இது இந்தியாவின் இரண்டாவது காகிதமற்ற நிதிநிலை அறிக்கையாகும்.
சிறப்பம்சங்கள்
பிளாக்செயின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எண்ணிம (டிஜிட்டல்) நாணயம் வெளியிடப்பட உள்ளது.
தேசிய தொலைத்தொடர்பு மனநலத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
சுழிய அளவிலான புதைபடிவ எரிபொருள் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
அரசின் ஆதரவு பெற்ற பசுமைப் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன.
இந்தியாவின் வளர்ச்சி: 9.2% என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியைக் குறைப்பதற்காகவும் வேண்டி எண்ணெய் வித்துக்களுக்கான திட்டம் தொடங்கப் படும்.
பிரதான் மந்திரி கதி சக்தி முதன்மைத் திட்டம் 25,000 கி.மீ. வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.
400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட உள்ளன
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.