மத்திய நேரடி வரிகள் வாரியம் - தலைவர்
February 21 , 2019
2289 days
1416
- இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான பிரமோத் சந்திர மோடி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT - Central Board of Direct Taxes) தலைவராகப் பொறுப்பேற்றார்.
- CBDT என்பது வருமான வரித் துறையின் கொள்கைகளை உருவாக்கும் ஒரு அமைப்பாகும்.
- இவர் 1982 ஆம் ஆண்டு வருவாய்ப் பணி அதிகாரியாக (வருமான வரி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சுஷில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது இடத்திற்கு பிரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
- CBDT ஆனது ஒரு தலைவரையும் அதிகபட்சம் 6 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.
Post Views:
1416