மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கர்தவ்யா தளம்
November 28 , 2019 2086 days 662 0
மாணவர்களுக்காக மாதாந்திரக் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதற்காக kartavya.ugc.ac.in என்ற இணைய தளத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்த இணைய தளமானது உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்காக மாதாந்திர கட்டுரைப் போட்டிகள், வினாடி வினாக்கள், சுவரொட்டி தயாரித்தல், விவாதங்கள் போன்றவற்றை நடத்த முதன்மையாகப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
தேசியக் கட்டுரைப் போட்டிகளின் 11 சுற்றுகள் ஒரு ஆண்டில் நடத்தப்பட இருக்கின்றது.
இந்தக் கட்டுரைப் போட்டியின் தலைப்புகள் ஒவ்வொரு மாதமும் ஒரு அடிப்படைக் கடமையின் அடிப்படையில் அமைந்திருக்கும்.