TNPSC Thervupettagam

மத்திய-மாநில உறவுகளுக்கான தமிழ்நாட்டுக் குழு

February 26 , 2026 20 days 119 0
  • மத்திய-மாநில உறவுகளுக்கான தமிழ்நாட்டுக் குழு தனது அறிக்கையின் இரண்டாம் பகுதி குறித்து ஆலோசிக்க புது தில்லியில் கூடியது.
  • தமிழக அரசால் ஏப்ரல் 2025 இல் ஒரு கட்சி சார்பற்றத் தன்மையுடன் அமைக்கப்பட்ட இந்தக் குழு அதன் பணியை ஜூன் 1, 2025 அன்று தொடங்கியது.
  • அறிக்கையின் முதல் பகுதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பிப்ரவரி 16, 2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப் பட்டது.
  • முதல் பகுதியானது மொழிக் கொள்கை, ஆளுநர், கல்வி, சுகாதாரம், எல்லை நிர்ணயம், தேர்தல்கள் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட 10 முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியது.
  • முதல் பகுதியின் தமிழ் பதிப்பு திறந்த அணுகல் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது என்பதோடு அரசாங்கம் அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்ப்புகளை முன்மொழிந்துள்ளது என்ற நிலையில் மேலும் அவற்றை அனைவரும் அணுகக் கூடியதாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்