மத்திய வங்கியின் எண்ணிம நாணயத்தினை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்பு
February 10 , 2023 978 days 460 0
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமானது, ரிசர்வ் வங்கியின் எண்ணிம ரூபாய் மூலமான சில்லறை விற்பனைக் கட்டணங்களை ஏற்கத் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
இதன் மூலம், மத்திய வங்கி எண்ணிம நாணயத்தை (CBDC) ஏற்றுக் கொண்ட முதல் இந்திய சில்லறை விற்பனையாளர் நிறுவனம் இதுவாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது, தனது முதலாவது சோதனை அடிப்படையிலான சில்லறை எண்ணிம ரூபாயினை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று அறிமுகப் படுத்தியது.
இந்த நாணயமானது சட்டப்பூர்வ அனுமதியினைக் குறிக்கும் எண்ணிம வில்லை வடிவத்தில் கிடைக்கிறது.
மத்திய வங்கி எண்ணிம நாணயம் (CBDC) ஆனது காகிதத்தாள் மற்றும் நாணயங்களின் அதே மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி எண்ணிம நாணயம் என்பது பணத்தாளுடன் சேர்ந்து புழக்கத்தில் இருக்கும் ஃபியட் பணத்தின் (அரசின் ஒப்புதல் பெற்ற பிற நாணய வடிவங்கள்) எண்ணிம வடிவமாகும்.