மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமானது புதிய, வளர்ந்து வரும் மற்றும் உத்திசார் தொழில்நுட்பங்கள் (NEST - New, Emerging and Strategic Technologies) என்ற ஒரு பிரிவை அமைத்துள்ளது.
இது புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்கு உதவுகின்றது.
மற்ற நாடுகளின் ஐந்தாம் தலைமுறை மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பகுதிகளுடன் பங்காளராவதற்கு NEST பிரிவு உதவுகின்றது.
NESTன் கீழ், பல்வேறு நெட்வொர்க் நிறுவனங்களின் தரவுகளின் பகிர்வை மத்திய அரசு அனுமதிக்கின்றது. இதில் ஐந்தாம் தலைமுறை சோதனைத் திட்டத்தின் கீழ் ஹுவாய் தனது வாடிக்கையாளர் விவரங்களை சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்கின்றது.
இந்தப் பிரிவானது புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குள் ஒரு இடைநிலை நிறுவனமாகச் செயல்படுகின்றது.
NEST பிரிவானது “தொழில்நுட்ப நிர்வாக விதிகள், தரநிலைகள் மற்றும் அமைப்பு” ஆகியவை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துகின்றது.