TNPSC Thervupettagam
September 6 , 2021 1420 days 633 0
  • காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமானது (Bureau of Police Research and Development – BPR&D) அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகத்துடன் இணைந்துமந்தன் 2021’ எனப்படும் இணைய தள ஹேக்கத்தானைத் தொடங்கியுள்ளது.
  • புலனாய்வு அமைப்புகளால் எதிர்கொள்ளப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமைமிக்க கருத்துக்களையும் தொழில்நுட்பத் தீர்வுகளையும் அடையாளம் காணச் செய்தலை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • BPR&D அமைப்பானது 1970களில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • காவல்துறையினை மிகுந்த நவீனமயமாக்கும் ஒரு முதன்மையான நோக்கத்தோடு இது தொடங்கப் பட்டது.
  • AICTE என்பது தொழில்நுட்பக் கல்விக்குக் கிடைக்கப் பெறும் வசதிகள் குறித்த ஒரு ஆய்வினை நடத்துவதற்கும் ஒருங்கிணைந்த முறையில் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமான ஒரு தேசிய அளவிலான உயர்மட்ட ஆலோசக அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்